கொரோனாவிலிருந்து நாடு முழுவதுமாக மீள குறைந்தது ஒரு மாதமாவது முடக்கவும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 26, 2020

கொரோனாவிலிருந்து நாடு முழுவதுமாக மீள குறைந்தது ஒரு மாதமாவது முடக்கவும்!

 கொரோனா தொற்றின் இரண்டாம் அலையிலிருந்து மீண்டெழுவதற்காக நாடு முழுவதும் குறைந்தது 3 வாரங்களுக்காவது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்சன ராஜகருணா இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

ஆரம்பத்திலிலேயே கம்பஹா மாவட்டத்தை முடக்கம் செய்திருந்தால் நாடு முழுவதிலும் தொற்று பரவாமல் தடுத்திருந்திருக்கலாம் என்றும் ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை என்பதால்தான் இவ் அனர்த்தம் நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.