மது குடித்து என்னுடன் உல்லாசமாக இரு என தொல்லை படுத்திய கணவன் , மனைவி பேஸ்புக் காதலனுடன் ஓட்டம் - இலங்கையில் சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 16, 2020

மது குடித்து என்னுடன் உல்லாசமாக இரு என தொல்லை படுத்திய கணவன் , மனைவி பேஸ்புக் காதலனுடன் ஓட்டம் - இலங்கையில் சம்பவம்

 மது அருந்தும்படி வற்புறுத்திய கணவனை விட்டு, பேஸ்புக் காதலனுடன் ஓடிச் சென்ற மனைவியை தன்னிடம் ஒப்படைக்கும்படி பொலிஸ் நிலையத்தில் கணவர் முறையிட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.


கொழும்பு மவுண்ட் லவனியாவில் வசித்து வந்த 25 வயதான திருமணமான இளம் பெண்ணொருவர், தமது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.

இந் நிலையில் , அம்பாறை உகணவில் குறித்த யுவதி உள்ளதை அறிந்த கணவன், உகண பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிவந்துள்ளதாவது,

சிறு வயதில் சிறுவர் இல்லத்தில் வசித்த அந்த இளைஞன் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், இந்நிலையில் திருமணம் முடித்த நிலையில் இளம் மனைவியையும் மது அருந்த அடிக்கடி வற்புறுத்தி வந்ததனால் மனைவி மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அம்பாறை உகண பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக்கில் காதல் வசப்பட்டுள்ளார் குறித்த யுவதி. இதனையடுத்து கணவனைவிட்டு பிரிந்து காதலருடன் சென்று இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இனிமேல் மனைவியை மது அருந்த சொல்லி வற்புறுத்த மாட்டேன், தன்னுடன் அவரை சேர்த்த வைக்கும்படி கணவன் பொலிஸாரிடம் கூறியபோதும், குறித்த யுவதி பேஸ்புக் காதலனுடன் வாழப் போவதாக அடம்பிடித்துள்ளார்.