யாழ்.நாவாந்துறை பகுதியில் மரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 16, 2020

யாழ்.நாவாந்துறை பகுதியில் மரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி!

 யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.


மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் குறித்த நபர் நாவாந்துறை - கண்ணாபுரம் பகுதியில் மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.


இதனையடுத்து மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 50ற்கும் மேற்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.