வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார்.
வவுனியா உளுக்குளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே அநுராதபுரம் வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்துள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த பெண் வவுனியா வைத்தியசாலை நோய் காரணாமாக சத்திரச்சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்ட அவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது.
காரணமாக அவர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பபட்ட நிலையில் அங்கு இன்று(26) இரவு மாலை உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.