அடுத்த ஆண்டு முதல் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 26, 2020

அடுத்த ஆண்டு முதல் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பு!

 அடுத்த ஆண்டு ஆரம்பத்துடன் சகல வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


வெதுப்பக உணவு உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.


புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வெண்ணைக்கு அறவிடப்பட்டு வந்த 200 ரூபாய் வரி 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.


இதற்காக வழங்கப்பட்ட நிவாரண காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.


இதனால், வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பை புதிய ஆண்டில் எதிர்பார்க்க முடியும் எனவும் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.