புரேவி புயல் இலங்கையை விட்டு நீங்கிச் சென்று விட்டது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையிலான பிரதேசத்தின் ஊடாக மன்னார் விரிகுடாவிற்குள் நகர்ந்துள்ளது.
அந்த நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி வெளியிட்ட அறிக்கையில்,
வடக்கு, வட மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மீன்பிடி சமூகம் மறு அறிவிததல் வரை கடலுக்குச் செல்லக்கூடாது.
சூறாவளியின் விளைவாக கடுமையான தாக்கமோ சேதமோ ஏற்படவில்லை, இருப்பினும் சூறாவளியின் விளைவு முற்றிலுமாக நின்றுவிடும் வரை அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.