சுவிட்சர்லாந்தில் மாஸ்குகளில் நச்சுப்பொருள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 18, 2020

சுவிட்சர்லாந்தில் மாஸ்குகளில் நச்சுப்பொருள்!

 கொரோனா பரவல் காலத்தில், மாஸ்குகள் நன்மை பயக்கும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தப்படும் நிலையில், சுவிஸ் தயாரிப்பான மாஸ்க் ஒன்றில் நச்சுப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்திலுள்ள Livinguard என்ற நிறுவன தயாரிப்பில்தான் aniline என்ற நச்சுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Viral Protect என்ற பெயரில் விற்கப்படும் கருப்பு நிறம் கொண்ட medium மற்றும் large அளவு கொண்ட மாஸ்குகளில் மட்டுமே பிரச்சினை இருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த நச்சுப்பொருள் உண்மையில் மாஸ்கில் இல்லையென்றும், அதை பார்சல் செய்ய பயன்பட்ட பொருளில்தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.


இந்த மாஸ்குகளில் பெரும்பாலானவை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொஞ்சம் சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் தெரியவந்ததையடுத்து அவை திரும்பப்பெறப்பட்டுள்ளன.


என்றாலும், தாங்கள் வாங்கியுள்ள மாஸ்க் பிரச்சினைக்குரிய நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை மாஸ்கா என்பதை மக்கள் உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.