யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரியில் கல்வி கற்றும் மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தரம் -7, தரம் - 9ல் கல்வி கற்கும் சகோதரிகளான மாணவிகளுக்கே நேற்றய தினம் வெளியான பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் மேலும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் இருவரும்,
மருதனார்மடம் தொற்றாளருடன் தொடர்பை பேணியவர்களுள் இரண்டாவது நாள் இனங்காணப்பட்ட கீரிமலை கூவில் பகுதியைச் சேர்ந்த
தொற்றாளரின் மகள்கள் என அறியமுடிகின்றது.மாணவிகள் இருவரும் கடந்தவாரம் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளதுடன்,
ஒன்பதாம் தரத்தில் கல்விகற்கும் மாணவி கடந்த சனிக்கிழமையும் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றில் பங்குபற்றியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவிகளின் வகுப்பினைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் கல்விகற்பித்த ஆசிரியர்கள் என எண்பதுக்கும் மேற்பட்டவர்களை
தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதரத்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.