கிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 26, 2020

கிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை!

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும். கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.

சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கொலையை அடுத்து அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முழங்காவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.