யாழ் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் 313 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 16, 2020

யாழ் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் 313 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள், 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக இன்று பெறப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு அங்கமாகவே இன்றையதினம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.