தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக பொலிஸாரால் நேற்று மாத்திரம் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாதது மற்றும் சரியான சமூக தூரத்தைப் பராமரிக்காமை காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2020 அக்டோபர் 30 முதல், தனிமைப்படுத்தப்பட்ட சட்ட மீறல்கள் தொடர்பாக மொத்தம் 1,390 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் துரோகிகளாகக் கருதப்படுவர் என ஏற்கனவே அஜித் ரோஹன கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.