யாழில் 15 வயது சிறுமியை சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தமை பெற்றோரிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சிறுமியினுடைய இரத்த உறவினர் மைத்துனர் உடன் காதல் தொடர்பு வைத்ததனால் இது இடம்பெற்றதாக தெரியவருகிறது.
இத்தொடர்பு வீட்டாருக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் சுகயீனம் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பம் தரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பரிசோதனை அறிக்கை நெல்லியடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் காதலரான மைத்துனரை நெல்லியடி பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகந்பரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.