காதலனின் தாயாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட யுவதிக்கு கொரோனா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, December 14, 2020

காதலனின் தாயாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட யுவதிக்கு கொரோனா!

 பாணந்துறை, பின்வல பகுதியில் தனது காதலனின் தாயாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட யுவதிக்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மரண வீட்டில் கலந்து கொண்ட 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்ணொருவரே உயிரிழந்திருந்த நிலையில் மகனின் காதலியும் மரண வீட்டில் கலந்து கொண்டிருந்தார்.


கடந்த 9ஆம் திகதி மரணவீட்டிற்கு வந்திருந்த அவர் மாமியாரின் உடலை கட்டியணைத்தும், வேறு சிலரை கட்டியணைத்தும் அவர் அழுதிருந்தார்.


குறித்த யுவதி ஹெரணையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். 

அந்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி அவரது பிசிஆர் மாதிரியை பெற்று சோதனையிட்டபோது, யுவதிக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.