கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த குடும்பமொன்று தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அந்த வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார்கள்.
மினுவாங்கொட, ஹொரன்பொல்ல, கலகட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
வீட்டிலுள்ள சி.சி.டி.வி கேரா அமைப்பு செயல்பட்டு வந்தாலும், திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது அவை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டிலிருந்த தளபாடங்கள், மின் சாதனங்களை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மினுவாங்கொட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.