திருவண்ணாமலை மாவட்டம் கீழ் புதூரை சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் கருவளையத்தை நீக்குவதாக ஆசை வார்த்தை கூறி விஷபாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரேசன் என்ற பாம்பாட்டி ஒருவர் திருபுவனையில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் குமரேசன் கருவளையத்தை இருந்த இடம் தெரியமால் நீக்குவதாக ஆசை வார்த்தை கூறி அங்குள்ள மக்களை நம்ப வைத்துள்ளார்.
இதனை மக்கள் நம்பி பலரும் இந்த சிகிச்சை பெற முன்வந்துள்ளனர். அப்போது அந்த பாம்பாட்டி 100 ரூபாயை வாங்கிக் கொண்டு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதற்கு அவர்களது முகத்தில் தேய்த்தார்.
இதனை பார்த்த பலர் பயந்து நடுங்கியபடியே இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். சில இளைஞர்கள் பயந்தும் ஓடியுள்ளனர்.
அதுமட்டுமின்றி குமரேசன் அந்த பாம்பு சிகிச்சையுடன் நின்று விடாமல் மஞ்சள் கரு கலந்த மருந்தையும் கொடுத்து அதை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு அந்த டிப்சும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கதாகும்.