வெகுவிரைவில் நாடு கடன் பொறிக்குள் சிக்கவுள்ளது- சம்பிக்க எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 12, 2020

வெகுவிரைவில் நாடு கடன் பொறிக்குள் சிக்கவுள்ளது- சம்பிக்க எச்சரிக்கை!

 

குறுகிய கால கடன்களினால் வெகுவிரைவில் நாடு கடன் பொறிக்குள் சிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் சகல துறைகளும் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், என்றாலும் நாடு மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் பொய்யான தரவுகளைக் கூறி சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் நாட்டின் கடன் நெருக்கடி மோசமான நிலையில் தலைதூக்கியுள்ளதுடன் கையிருப்பு 5.8 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்