கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை நான் ஒரு அரசியல்வாதியாகவும் கணக்கெடுப்பதில்லை. ஒரு மனிதனாகவும் கணகெடுப்பதில்லை. அவர் ஒரு காமடி பீஸ் என இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இத் தினத்தில் அவர் தலைமையில் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
ஒரு இலச்சம் வேலை வாய்பு என்பது நாட்டின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டவாறு அந்த வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இன்னும் இரண்டாம் மூன்றாம் கட்டம் வழங்கப்படவுள்ளது.
கருணா ஒரு கருத்தை வெளியிட்டதை ஒரு ஊடகங்கள் வாயலாக பார்த்தேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அமைச்சர் அந்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்துக்கு 20 ஆயிரம் ரூபா வாங்கி வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாக அவர் சொல்லியுள்ளார்.
ஒரு 5 ரூபா பெறுமதியான விண்ணப்பபடிவம். இதனை பிரதேச செயலகங்களில் எடுத்து அவர்கள் விண்ணப்பித்து அந்த வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் அந்த வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். எனவே இது ஒரு வகையான பெறாமையின் வெளிப்பாடு.
கருணா என்பவின் பெயரை நான் எங்கும் பாவித்ததில்லை. காரணம் என்னவென்றால் அவர் மக்கள் மத்தில் பிரபல்யமானவர்களின் பெயரை உச்சரித்து தான் பிரபல்யமாகிக்கொள்ள வேண்டும் என நினைக்கின்ற ஒருவர் தான் அவர். ஆகவே அவர் என்ன பேசினாலும் கணக்கெடுப்பதில்லை நான்.
தேர்தல் காலத்தில் எனது வீட்டை வைத்து பேசினார். இங்கு தையல் மெசினில் கேட்டார் படுதோல்வி. அம்பாறையில் கேட்டு அங்கும் தோல்வி. அவருடைய பேச்சு ஒரு காமடியான பேச்சு. உடைப்போம் எறிவோம் அடிப்போம் இது எல்லாம் ஜனநாயத்துக்கு மாறான செயற்பாடு. அவரை நான் ஒரு அரசியல்வாதியாகவும் கணக்கெடுப்பதில்லை. ஒரு மனிதனாகவும் கணகெடுப்பதில்லை. அவர் ஒரு காமடி பீஸ் என அவர் மேலும் காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.