இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 470 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 10 ஆயிரத்து 653 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 15 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 ஆயிரத்து 653 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்து 651 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.1