தமிழகத்தில் பெண் காவலர் காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த பைனான்சியர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த பைனான்சியர் பரமசிவம் என்பவரின் மகன் பிரபு என்ற 25 வயது இளைஞர் திருச்சியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, திருச்சி காவல்துறையில் பொலிசாக பணியாற்றிய வைதேகிக்கும் பிரபுவுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
பிறகு, திருவாரூர் காவல் நிலையத்துக்கு வைதேகி மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருவாரூர் காவலர் குடியிருப்பிலேயே லிவிங் டுகெதராக பிரபுவுடன் வைதேகி இணைந்து வாழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது, மன்னார்குடி காவல் நிலையத்தில் வைதேகி பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபு வைதேகியை திருமணம் செய்து கொள்ள அவரின் பெற்றேரிடத்தில் பேசியுள்ளார். வைதேகி குடும்பத்தார் திருமணத்துக்கு மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு பிறகு, வைதேகியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று பிரபுவிடத்தில் வைதேதி கூறியதாக தெரிகிறது. இதனால் பிரபு அதிர்ச்சியடைந்த போதிலும் வைதேகியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார்.
தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக மன்னார்குடி காவல் நிலையத்தில் புரபு புகாரும் அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மன வேதனையடைந்த பிரபு நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபு சிகிச்சை பெற்று வருகிறார் என தெரியவந்துள்ளது.