யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றைய தினம் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த கூட்டம் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றபோது, குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டடுள்ளது. இறுதியில் முதல்வரின் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த தடையினை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் சாரதிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கான விசாரணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதுடன் அதற்கான பதிலை ஆணையாளரால் வழங்கியிருந்தார்.