கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க காரணமாக இருந்த கொழும்பு பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தனியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி-1.42 ரக தொற்றுப்பிரிவு பரவியிருப்பதாக சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மினுவங்கொடை கொரோனா கொத்தனி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது.
எனினும் அதனை மிஞ்சிய பேலியகொடை மீன்சந்தை கொத்தனி ஒக்டோபர் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து இன்றுவரை பாரிய அளவில் வியாபித்து வருகின்றது.