இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்ஞகிறது.
நேற்று மாத்திரம் 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை 20 ஆயிரத்து 967 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா நோயாளர்களுள் 458 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா நோயாளர்களடன் தொடர்பில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த துருக்கி எயார்லைன்ஸ் விமான உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 14 ஆயிரத்து 962 ஆக உயர்வடைந்தது.
இதனையடுத்து, தற்போது நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5, 911 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 601 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.