கொழும்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 24, 2020

கொழும்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதன் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 12, 248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு 2 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.



அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறுகூறினார்.


கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே தற்போது கொவிட் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இலங்கையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்து 67 நாட்கள் கொழும்பு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.


தற்போது ஒக்டோபர் மாதம் இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 12, 248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10, 000 பெறுமதியான உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 110 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது.


கொழும்பு நகரில் இதுவரையில் 13 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு மொரட்டுவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.