மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (22.10.2020) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு முருகன் கோயில் வீதியிலுள்ள அடர்ந்த மரமுநதிரிகைக் காட்டினுள் முந்திரிகை மரத்தில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் உருக்குலைந்த நிலையில மீட்கப்பட்டுள்ளது.
அதே வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கனகசுந்தரம் ஜதீஸ்காந்த் என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த திடீர் மரண வசாரணை அதிகாரி கே.ஜீவரட்ணம் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
குறித்த இளைஞர் சில தினங்களின் முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.