இலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 22, 2020

இலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது!

 இலங்கையின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.இன்று மேலும் 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கட்டுநாயக்கவில் 22 பேர், பேலியகொடவில் 6 பேர், மற்றும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 22 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

இதன்மூலம் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6028 ஆக உயர்ந்துள்ளது.

மினுவாங்கொட கொரோனா அலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2558 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 3561 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். 2454 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.