டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 2, 2020

டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி!

 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவர் மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் பல அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக டிரம்ப்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தனர்.

மேலும், இருவரும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

தற்போது பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் இருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.