யுத்தத்தில் உயிரிழந்த ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு விசேட சலுகை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 2, 2020

யுத்தத்தில் உயிரிழந்த ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு விசேட சலுகை!

 

முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி உயிர் இழந்த, ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக நடமாடும் சேவையொன்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன,

முப்படை தளபதிகள் மற்றும் செயல் பொலிஸ் மா அதிபர் தலைமையில் (02இன்று 08.00 மணி முதல் 17.00 மணி வரை அனுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடத்த ரணவிரு சேவா அதிகார சபையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போர்வீரர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் தேவைகளை மிகவும் திறமையாக பூர்த்தி செய்வதற்காக நடத்தப்படுகின்ற இந்த நடமாடும் சேவையின் முதல் கட்டம் கலுதர மாவட்டத்தில் நடத்தப்பட்டதுடன்

அதன் இரண்டாம் கட்டமாக அனுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடத்தப்படவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் பங்கேற்று தேவையான சேவைகளைப் பெற்றுகொள்ள முப்படை,

பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி உயிர் இழந்த, ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுடைய குடும்ப உருப்பினர்களுக்கு ரணவிரு சேவா அதிகாரசபை அழைப்பு விடுத்துள்ளது