ரிஷாட் பதியூதினை உடனடியாக கைது செய்ய உத்தரவு? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 13, 2020

ரிஷாட் பதியூதினை உடனடியாக கைது செய்ய உத்தரவு?

 முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.


2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச பேருந்துகளைப் பயன்படுத்தி புத்தளத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதாக ரிஷாட் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

அதற்கமைய அவர் மீது நீதிமன்ற பிடியாணையைப் பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.