யாழில் வீட்டுக்குள் வைத்து வாள்களுடன் காவலி ஒருவன் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 13, 2020

யாழில் வீட்டுக்குள் வைத்து வாள்களுடன் காவலி ஒருவன் கைது!

 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று நண்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.


“அந்த வீட்டி


ல் 3 புதிய வாள்களை மறைத்து வைத்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் இன்று நண்பகல் குறித்த வீட்டுக்குச் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் மேற்கொண்டனர்.


அங்கு 3 வாள்களை மீட்டதுடன் அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரையும் சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.