முருங்கன் ஆரம்பப் பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலையின் அதிபரை திடீர் என இடமாற்றம் செய்தமையை கண்டித்து, கடந்த 30 ஆம் திகதி போராட்டம் மேற்கொள்ளப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் இன்று வரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள்,
பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் பாடசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது