யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தல் பிசிஆர் மாதிரி பெறப்பட்டது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, October 5, 2020

யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தல் பிசிஆர் மாதிரி பெறப்பட்டது!

 கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை நாளை (06) கிடைக்கப்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.