இதுவரையில் சுமார் 19 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதில் பத்து பேர் காவற்துறை அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, குறித்த காவற்துறை அதிகாரிகளுடன் தொடர்பை பேணிய சுமார் 300 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த அதிகாரிகள் பணியாற்றிய இடங்கள் முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, பிற காவல் நிலையங்களில் உள்ள காவற்துறை அதிகாரிகளின் ஊடாக சேவைகளை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் பிரதி காவற்துறைமா அதிபரும் காவற்துறை ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.