யாழ் கோப்பாய் பூதர்மடத்தில் விபத்து!! ஆசிரிய ஆலோசகர் பலி!! தெருவில் சிதறிக் கிடந்த பற்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 6, 2020

யாழ் கோப்பாய் பூதர்மடத்தில் விபத்து!! ஆசிரிய ஆலோசகர் பலி!! தெருவில் சிதறிக் கிடந்த பற்கள்!

 கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று (செப்.6) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63)

என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே

உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது

என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை

சமர்ப்பித்துள்ளனர்.

 

சம்பவத்தில் படுகாயம் அடைந்த மூவரும் கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் கடுமையாகச் சேதமடைந்துள்ள அதேவேளை வீதியில் விபத்தில் சிக்கியவர்களின் பற்கள் சிதறிக்கிடப்பதை அவதானிக்க முடிந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.