ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தியா தேவி. இவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகவுள்ளது.
ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தேவியை அவர் தாய் வீட்டில் கணவர் கொண்டு விட்டுள்ளார். இதை விரும்பாத தேவி அப்போதிருந்தே வேதனையில் இருந்திருக்கிறார்.
இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு கணவருடன் வெகு நேரம் தேவி போனில் பேசிய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் தனது அறைக்கு தேவி தூங்க சென்றுவிட்டார், நேற்று காலை வெகுநேரமாக அறையில் இருந்து அவர் வெளியில் வரவில்லை.
இதையடுத்து குடும்பத்தார் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்த போது தேவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து தேவி சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்