கிளிநொச்சி பரந்தனில் தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடியின் சடலம் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 10, 2020

கிளிநொச்சி பரந்தனில் தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடியின் சடலம் மீட்பு!

பரந்தனில் தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடியின் சடலம் மீட்பு!கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.