நாட்டுக்காக போராடி தனது அங்க அவயங்களை இழந்து இடுப்பிற்கு கீழ் இயங்காத முன்னாள் போராளியான செல்வராஜ் ஜெகதீஸ்வரன் என்கின்ற முன்னாள் போராளிக்கு அவுஸ்ரேலியா நாட்டில் வாழ்கின்ற புலம்பெயர் உறவுகளின் ஊடாக திரட்டப்பட்ட நிதியில் முல்லை ஓசை அவுஸ்திரேலியா என்கின்ற அமைப்பினால் குறித்த முச்சக்கர வண்டி கையளிக்கப்பட்டுள்ளது
மன்னார் வீதி, சிவபுரம், வவுனியா எனும் முகவரியில் வசிக்கின்ற குறித்த முன்னாள் போராளியும் அவருடைய சகோதரன் ஒருவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவரும் இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையில் அவருடன் வசித்து வருகிறார். இருவருடைய வாழ்வாதாரத்தையும் அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் முகமாக அவுஸ்திரேலியா நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகளின் நிதி பங்களிப்புடன் முல்லை ஓசை அவுஸ்திரேலியா என்ற அமைப்பின் ஊடாக குறித்த முச்சக்கர வண்டி அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனூடாக அவர் தன்னுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும், தாங்கள் சாதாரணமாக ஒவ்வொரு முறையும் வைத்தியசாலை செல்வதற்கு செலவழிக்கின்ற நிதிக்கே துன்பப்படுகிறோம் எனவும், இதன் ஊடாக அவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைக் கொண்டு தான் முன்னேற முடியும் எனவும் குறித்த பயனாளி தெரிவித்திருக்கின்றார்.