மாளவிகா மோகனின் பிறந்தநாள் இன்று! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 9, 2020

மாளவிகா மோகனின் பிறந்தநாள் இன்று!

 


நடிகை மாளவிகா மோகன் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடுகின்ற நிலையில், மாஸ்டர் படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகன்  கடந்த 2013ஆம்  ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.  பின்னர் கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார்.

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர்  தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள “மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது