பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று(வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் 20 மற்றும் 25 வயது பெண்கள் என்பதுடன், கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதி உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது