ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 17, 2020

ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர்



பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால்  நான் கடத்தப்பட்டேன் என அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரான  வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் வசிக்கும் விகாரையில் இருந்த அரம்பேபொல ரதனசார தேரர், இனந்தெரியாத குழுவினரினால் தாக்கப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற அரம்பேபொல ரதனசார தேரரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை மையமாக வைத்தே அண்மையில் நான் கடத்தப்பட்டேன்.

அதாவது, கல கொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோர் என்னை கடத்திச் சென்று, துப்பாக்கியால் தாக்கினார்கள்.

 அதனால்தான்  எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் பல இடங்களில் தடுத்து வைப்பதற்காக, கட்சி செயலாளர்கள் குறித்து விசாரித்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்