பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 17, 2020

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 451 கி.மீ தென்கிழக்கில் இருந்ததாகவும் கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் தாக்கியதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரையில் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது