கொரோனா தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்தனர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 9, 2020

கொரோனா தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்தனர்

 

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 576ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இரண்டாயிரத்து 841ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இருவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை 251 வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.