மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் – பிரதமர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 9, 2020

மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் – பிரதமர்

 


மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் 4ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழழமை) காலை மீண்டும் பதவியேற்றார்,

இதன் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறறேன்.

இலங்கையர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை எனது தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய என்னைத் தூண்டுகிறது.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முன்னோக்கி பயணிக்கும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்