ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே அக்கட்சியின் தலைவராக இருப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவடைந்த பொதுத்தேர்தலில், ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அவசர கூட்டமொன்றை அக்கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நடத்தியது.
இதன்போது, தலைமைத்துவம் குறித்து தீர்மானம் எடுக்கும்வரை ரணில் விக்ரமசிங்கவே தலைவராக இருப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க, தலைமைப் பதவியிலிருந்து விலகுவது குறித்த விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.