சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, August 12, 2020

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

 


சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளத.

இதனையடுத்து,  நாட்டின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எல்லை பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு எல்லைகளை கண்காணித்து வருகின்றனர்.

மும்பையில் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவியதைப் போல் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாயும் செனாப் நதி வழியாக படகுகள் மூலமும் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதனால், நதிக்கரைகளில் முகாம் அமைத்து படைவீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் விழாவை நடத்த ஏற்கனவே மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதைப் பின்பற்றி விழாவை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கட்டுபாடுகளை வகுப்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது