தமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 12, 2020

தமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு!

 


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் ஐயாயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 520ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (புதன்கிழமை) ஒரேநாளில் அதிகபட்சமாக 119 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஐயாயிரத்து 278ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு இதுவரை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 59 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மொத்தமாக நான்காயிரத்து 878 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், ஐயாயிரத்து 633 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்தும் 52 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, இன்று 71 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 33 இலட்சத்து10 ஆயிரத்து 36 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது