அமேசன் மழைக்காடுகளில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால் முதலீடுகள் முடக்கப்படும்- முதலீட்டாளர்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 12, 2020

அமேசன் மழைக்காடுகளில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால் முதலீடுகள் முடக்கப்படும்- முதலீட்டாளர்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை!

 


பிரேசிலின் அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தாவிட்டால், 2 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெறப்போவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அதிகரிக்க, அமேசன் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில், இந்த ஓகஸ்ற் மாத தொடக்கத்தில் இருந்து 10 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பேவின் (Inpe) தரவுகளின்படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஓகஸ்ற் முதல் ஆறு நாட்களில் அமேசனில் 5,860 தீ விபத்துக்களை இந்த நிறுவனம் பதிவுசெய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு எரிக்கப்பட்ட சில பகுதிகள் இப்போது கால்நடை வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேய்ச்சலுக்கு நிலத்தை அழிக்க அமேசன் முழுவதும் தீ பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

இதேவேளை, இந்த தீ விபத்துக்கள் இயற்கையாக ஏற்படுவதில்லை எனவும், விவசாயம் மற்றும் மேய்ச்சலுக்காக சட்டவிரோதமாக மனிதர்கள் காட்டினை அழிக்கிறார்கள் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்