நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவத்தினை நேரலையாக காண மக்களுக்கு வாய்ப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 17, 2020

நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவத்தினை நேரலையாக காண மக்களுக்கு வாய்ப்பு!


வரலாற்று சிறப்பமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ நிகழ்வு ஷண்முக தீர்த்த கேணியில் தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தீர்த்தோற்சவம் மற்றும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறவுள்ள கொடியிறக்கம் ஆகியவற்றை மக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிக்கும் வண்ணம் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

அதற்கமைய ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ’ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்

கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் முகமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

நல்லூரானின் பெருந்திருவிழா கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே திருவிழா இடம்பெற்று வந்தது.

மேலும் 25 நாட்கள் நடைபெற்று வரும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 13ஆம் திகதி கைலாச வாகனமும் மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும் நேற்று முன்தினம் சப்பரதத் திருவிழாவும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நேற்று தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது