பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க முடியாதவர்கள் தற்பொழுது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர் – தினேஸ் குணவர்தன - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 21, 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க முடியாதவர்கள் தற்பொழுது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர் – தினேஸ் குணவர்தன

 

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு உரிய வகையில் நியமனங்கள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத தரப்பினர் தற்பொழுது அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை விமர்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தெளிவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் தினேஸ் குணவர்தன இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஜனாதிபதி ஆற்றிய உரையில் 60,000 பட்டதாரிளுக்கு நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஆவணத்தில் 50,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வேறுபாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியதுடன் அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக அவசர அவசரமாக தெளிவற்ற வகையில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றது.

நியமனங்களுக்கு தெரிவாகாத பட்டதாரிகள் அது குறித்து மேன்முறையீடு செய்ய முடியும். இதற்கான நடவடிக்கையை தற்பொழுது அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பட்டதாரிகள் எவருக்கும் பாதிப்பு எற்படாத வகையிலேயே தனது திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன தாம் பதவியில் இருந்த போது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தீர்வுக்கு எதுவுமே செய்ய தவறியவர்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சிக்கின்றனர்” கூட்டிக்காட்டினார்