முல்லைத்தீவில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்த 5 பேர்கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 5, 2020

முல்லைத்தீவில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்த 5 பேர்கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (05.08.2020) வேட்பாளர்கள் துண்டு பிரசுரங்கள் வினியோகித்த கட்சிகளின் ஆதரவாளர்கள் 5 பேர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்று அதிகாலை முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்களை பிரசுரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்த துண்டுபிரசுரங்கள் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.

முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் அதிகாலை வேளை வாகனத்தில் தமிழ்மக்கள் தேசியக்கூட்டணியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்த மூவர் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாகனமும் அதில் இருந்து பெருமளவான துண்டுப்பிரசுரங்களும் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது வானம் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் மூவரும் முள்ளியவளை பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.