இன்று (05) காலை தம்புத்தேகம – தஹாயகம சந்திப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் எஸ்.எவ் லொக்கா என்ற பிரபல பாதாள உலகக்குழு தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காரில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தஹய்யகம புகையிரத கடவைக்கு அருகில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொக்கா கொல்லப்பட்டார். கார் சாரதி காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டையடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது.அனுராதபுராவில் ஒரு கிளப்பின் உரிமையாளரான கராத்தே சாம்பியன் வசந்த சொய்சா 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய சந்தேக நபர் அயர்ன் ரணசிங்க என்ற எஸ்.எஃப் லொக்கா என்பது குறிப்பிடத்தக்கது.